Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கான பயன்தரும் கிச்சன் டிப்ஸ்!!

Updated: புதன், 22 மே 2019 (14:24 IST)
  
வாழைப்பூ வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கி மோர் கலந்த நீரில் வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும். கரையும் பிடிக்காது. அதில் உள்ள   துவர்ப்பும் நீங்கி விடும்.
 
மழைக் காலத்தில் உப்பில் நீர் சேர்ந்து விடாமல் இருப்பதற்காக நாலைந்து அரிசியை உப்பு ஜாடியில் போட்டு வைத்தால் தண்ணீர் படியாமல்  இருக்கும். நெய் கெடாமல் இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத் துண்டை போட்டு வைத்தால் கெடாமல் இருக்கும்.
 
இடியாப்பம் மிச்சமானால் ஒரு நாள் முழுவதும் புளித்த தயிரில் ஊற வைத்துவிட்டு, நிழலில் உலர்த்தி வற்றலாக்கி வைத்துக் கொள்ளலாம்.  நன்றாக காய்ந்த பின் டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது வறுத்து சாப்பிடலாம்.
 
பாகற்காயை சமைப்பதற்கு முன்னால் அரைமணி நேரம் உப்பு கலந்த நீரில் ஊற வைத்தால் அதன் கசப்பு போய்விடும்.
 
சப்பாத்தி மாவு எப்படி பிசைந்தாலும், மிருதுவாக வரவில்லை என்ற குறையை நீக்க, மாவில் சிறிதளவு பால் ஊற்றிப் பிசைந்துகொள்ள  வேண்டும். பாலாடைக் கட்டி போட்டு பிசைந்தாலும் நல்லது. வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து மாவுடன் கலந்து பிசைந்தாலும்   சப்பாத்தி மென்மையாக வரும்.

எல்லாம் காட்டு

உடல் நலம் சரியில்லாதபோது என்ன சாப்பிட வேண்டும்?!.. வாங்க பார்ப்போம்!..

உறுப்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் உணவுகள்.. வாங்க பார்ப்போம்!...

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

அடுத்த கட்டுரையில்
Show comments