Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராளுமன்ற தேர்தலில் நிர்மலா சீதாராமன் மதுரையில் போட்டியா?

Updated: வியாழன், 5 ஜூலை 2018 (07:15 IST)
வரும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வரும் என்றாலும் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக+பாஜக கூட்டணி உருவாகுவது நிச்சயம் என்று இருதரப்பினர்களும் கூறி வருகின்றனர்.
 
மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எட்டு தொகுதிகள் கிடைக்குமாம். மதுரை, கோவை, கன்னியாகுமரி, திருச்சி, சேலம், ராமநாதபுரம், தென் சென்னை, திருப்பூர் ஆகிய தொகுதிகள் பாஜகவின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
 
மேலும் நிர்மலா சீதாராமனை மதுரையில் போட்டியிட வைக்க திட்டமுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்காகத்தான் எய்ம்ஸ் அறிவிப்பு என்றும், இன்னும் சில அறிவிப்பு மதுரையை சார்ந்து வரும் என்றும் கூறப்படுகிறது.
 
இந்த எட்டு தொகுதிகளிலும் பிரபலங்களை போட்டியிட வைத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம் என்றும், பாஜக போட்டியிடும் எட்டு தொகுதிகளுக்கும் தேர்தலுக்கு முன்பே பல வளர்ச்சித்திட்டங்களின் அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

எல்லாம் காட்டு

லண்டனில் அஜித் கார் ரேஸை துவங்கி வைக்கும் விஜய்!.. பின்னணி என்ன?....

அதிமுக, திமுக கூட்டணிகள் தனித்து போட்டியிட்டால் தவெக வெற்றி உறுதி.. அரசியல் விமர்சகர்கள்...

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. தவெக ஆட்சியிலும் ஆம்னி பேருந்தில் கட்டண கொள்ளை...

திருச்சி ரயில்வே கோட்டம் முழுமையான மின்மயமாக்கம்.. தமிழ்நாடு ரயில்வே வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மைல்கல்..

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்.. யாருக்கு வெற்றி வாய்ப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments