1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 7 ஜூலை 2018 (22:48 IST)

இன்று நடக்கவிருந்த பிரபல நடிகரின் திருமணம் திடீர் ரத்து! காரணம் என்ன?

ஊட்டியில் இன்று பிரபல பாலிவுட் நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால் அவர் திடீரென தலைமறைவானதால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
 
நடிகர் மிதுன்சக்கரவர்த்தியின் மகன் மஹா அக்‌ஷய் என்பவர் ஒரு பெண்ணை காதலித்து அவரை கர்ப்பமாக்கிவிட்டு கைவிட்டதாக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்று மஹா அக்‌ஷய் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் மஹா அக்‌ஷய்க்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர்
 
இந்த திருமணம் மிதுனுக்கு சொந்தமான ஊட்டி பங்களாவில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ளும் வகையில் இன்று நடைபெறவிருந்தது. ஆனால் மஹா அக்‌ஷய் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வந்தவுடன் அவர் தலைமறைவானார். இதனால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.