திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (20:26 IST)

கருணாநிதி-சோம்நாத் சாட்டர்ஜி -வாஜ்பாய்: ஒரே மாதத்தில் மறைந்த முப்பெரும் தலைவர்கள்

இந்த மாதம் இந்தியாவிற்கே சோகமான மாதமாக அமைந்துவிட்டது. கருணாநிதி, சோம்நாத் சாட்டர்ஜி மற்றும் வாஜ்பாய் ஆகிய முப்பெரும் தலைவர்கள் அடுத்தடுத்து காலமானது ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது.
 
ஆகஸ்ட் 7ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே கலங்க வைத்தது. 94வயது முதுபெரும் அரசியல் தலைவர், 14 பிரதமர்களை பார்த்தவர், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராக இருந்தவர், ஐந்து முறை முதல்வர் பதவியை வகித்தவர், ஒரு தேர்தலிலும் தோல்வியே காணாதவர் என்ற பெருமைகளுக்கு சொந்தக்காரரான கருணாநிதியின் மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும்.
 
கருணாநிதி மறைந்த மூன்றே நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் 10 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவரும், முன்னாள் மக்களவை சபாநாயகருமான சோம்நாத் சாட்டர்ஜி காலமானார். அவருடைய மறைவு கம்யூனிஸ்ட் கட்சியினர்களுக்கு மட்டுமின்றி அனைத்து இந்தியர்களுக்கும் ஒரு பேரிழப்பாகும்
 
இந்த இரண்டு பெரும் தலைவர்களின் மறைவை ஜீரணிக்க முடியாமல் இருந்த நிலையில் இன்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார். பொக்ரான் அணுகுண்டு, கார்கில் போர் ஆகியவை குறித்து கூறினாலே அனைவருக்கும் வாஜ்பாய் ஞாபகம் தான் வரும். காலத்தால் அழியாத சாதனைகளை செய்த இந்த மூன்று பெரும் தலைவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் அவர்களுடைய புகழை வரலாறு என்றென்றும் கூறிக்கொண்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.