ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (20:16 IST)

டேபிள் வாங்க சேர்த்து வைத்த பணத்தை வெள்ள நிவாரண நிதியாக கொடுத்த குழந்தைகள்

தமிழகத்தில் விழுப்புரத்தை சேர்ந்த அனுப்ரியா என்ற சிறுமி சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்து வைத்த பணத்தை கேரள வெள்ள நிதியாக கொடுத்தார் என்பது தெரிந்ததே. இதேபோன்ற ஒரு நிகழ்ச்சியான சம்பவம் கேரளாவிலும் நடந்துள்ளது.
 
கேரள மாநிலத்தில் கொச்சி பகுதியை சேர்ந்த சித்திக் மல்லாசரி மற்றும் பாத்திமா என்ற தம்பதிகளின் குழந்தைகளான ஹாரன் மற்றும் தியா ஆகிய சகோதர சகோதரிகள் படிப்பதற்காக டேபிள் வாங்க உண்டியலில் சிறுக சிறுக சேர்த்து வைத்தனர். தற்போது அந்த பணம் ரூ.2210 சேர்ந்த நிலையில் மொத்த பணத்தையும் அவர்கள் கேரள வெள்ள நிவாரண நிதியாக கொடுத்துவிட்டனர். 
 
இந்த தொகை மிகப்பெரிய தொகை இல்லை எனினும் இரண்டு குழந்தைகளின் மனங்களை மதிப்பிட எத்தனை கோடி கொடுத்தாலும் முடியாது. உலகில் இன்னும் மனிதத்தன்மை உயிருடன் உள்ளது என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு இருக்கவே முடியாது என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர்.