திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 31 மார்ச் 2018 (14:51 IST)

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் வேண்டும் - மத்திய அரசு மனு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத கால அவகாசம் வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

 
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கொடுத்த 6 வார கெடு முடிவடைந்தும் மத்திய அரசு எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. இது தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எனவே இன்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தமிழக அரசு தொடரவுள்ளது. 
 
அந்நிலையில் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள திட்டம் என்றால் வாரியமா அல்லது குழுவா? என்று விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியானனது.
 
இந்நிலையில், விளக்கம் கேட்பதோடு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு தரப்பில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.  அதாவது, தீர்ப்பு வெளியான 16.02.2018ல் இருந்து 3 மாதம் அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை மனு தாக்கல் செய்துள்ளது.
 
கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தை தள்ளிப்போடவே மத்திய அரசு இப்படி செயல்படுகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.