செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: திங்கள், 3 செப்டம்பர் 2018 (13:21 IST)

இனி தமிழில் மட்டுமே: ஜி.வி. சூப்பர் முடிவு

நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் இனி தான் தமிழில் மட்டுமே கையெழுத்து போட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, கதாநாயகனாக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் படத்தில் மட்டுமல்லாமல், நிஜவாழ்க்கையிலும் சமூக பிரச்சனைகளுக்காக போராடி வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்னை, அனிதா மரணம், விவசாயிகள் பிரச்னை, அரசியல் அவலங்கள் என அனைத்துக்குமே குரல் கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்து உயிரிழ்ந்த அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்கு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ‘மறதி ஒரு தேசிய வியாதி’ என பதிவிட்டிருந்தார்.


இந்நிலையில் உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் , எனை ஆட்கொண்ட தமிழ். இனி  என் “கையெழுத்துகள்” தமிழில் மட்டும் என்று உளமாற உறுதி ஏற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஐஏஎஸ் அதிகாரி சகாயம் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.