1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: திங்கள், 16 மே 2016 (15:26 IST)

தமிழகத்தில் 1 மணி வரை 42.1 சதவிகித வாக்குப்பதிவு

தமிழகத்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
தமிழகம், புதுச்சேரி சட்டசபை  தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி அளவில் தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தவிர மற்ற 232 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 
 
தமிழகத்தில் காலை முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மழை காரணமாக சில மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு மந்தாமாகியுள்ளது. அந்த பகுதியில் வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்படும் என்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், மதியம் 1 மணி நிலவரப்படி 42.1 சதவிகித வாக்குகள் பதிவாகியிருப்பதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 
சென்னையில் 1 மணி வரை 38 சதவிகித வாக்குப்பதிவும், திருவள்ளூரில் 46.13 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளது.