வியாழன், 13 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Bala
Last Modified: சனி, 30 ஏப்ரல் 2016 (12:09 IST)

விஜயகாந்த் வேட்புமனு ஏற்பு

உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் விஜயகாந்த் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


 

தமிழக சட்டபேரவைக்கான தேர்தல் வருகிற மே 16ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல்கில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் ஏப்.22ம் தேதி துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. 122 பொதுபார்வையாளகள் மத்தியில் இந்த வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில் முக்கிய வேட்பாளர்கள் வெட்பு மனு குறித்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதன்படி உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக தலௌவர் விஜயகாந்த் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.கே. நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா, திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போறோரது வேட்புமனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்த முழு விபரங்கள் இன்று மாலை வெளியாகும் என தெரிகிறது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்