பல்லடம்: அதிமுக வேட்பாளர் முன்னிலை
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அதில் பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர் நடராஜன் 500 ஓட்டுக்கள் பெற்று முன்னிலையில் உள்ளார்.