தேமுதிக-வை பின்னுக்கு தள்ளிய பாமக
தேமுதிக-வை பின்னுக்கு தள்ளிய பாமக
தமிழக சட்ட மன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த கட்சி என்று கூறப்படும் தேமுக-வையே, பாமக பின்னுக்கு தள்ளியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி அதிமுக முன்னிலை பெற்று வருகிறது. இதற்கு அடுத்து திமுக வந்துகொண்டுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் திமுக, அதிமுக-வுக்கு மாற்றாக தேமுதிக என கூறப்பட்டு வந்தது. ஆனால், பாமக வட மாவட்டங்களில் மட்டுமே பலம் வாய்ந்தது என கூறப்பட்டது. இந்த நிலையில், அதிமுக 109 இடங்களிலும், திமுக 76 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாமக 4 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. ஆனால், தேமுதிக ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை. எனவே, தேமுதிக-வையும், விஜயகாந்த்-தையும் மக்கள் புறக்கணித்துவிட்டார்கள் என்பதே இந்த தேர்தல் நிலவரம் காட்டுகிறது.