வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : வெள்ளி, 14 ஜூன் 2019 (20:30 IST)

'இது வெறும் நிகழ்ச்சி அல்ல,நம்ம வாழ்க்கை':பிக் பாஸின் புதிய ப்ரொமோ

பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3,வருகிற ஜூன் 23 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோஷன் வீடியொ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 1 மற்றும் சீசன் 2 நிகழ்ச்சிகள், ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றன. இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 3 ஜூன் 23 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

பிரபல நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 –ல், யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்பது பற்றி சரியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், தற்போது சீசன் 3-யின் புதிய ப்ரோமோஷன் வீடியொ வெளியானது, பிக் பாஸ் ரசிகர்களுக்கு பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.