ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (08:55 IST)

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் - பிரபலங்கள் அதிர்ச்சி (வீடியோ)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.


 

 
அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒரு புரோமோ வீடியோ இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் சாக்கு பையுடன் ஒரு மர்ம நபர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். நான் யார் என அவர் யாரிடம் கூறாமல், எல்லோரிடம் சென்று பேசுகிறார். இதைக் கண்டு, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன்பின் அவர் கேமரா முன்பு சென்று பிக்பாஸிடம் ஏதோ முறையிடுகிறார்.
 
ஓவியா சென்ற பின் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக பலரும் கூறிவருகிறார்கள். எனவே, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே இது போன்ற விளையாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.