1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (17:10 IST)

ஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி?: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்!

ஓவியாவை அனுப்பிவிட்டு ஜாலியாக எப்படி?: ஆரவிற்கு எதிராக திரும்பும் சினேகன்!

பிக் பாஸ் வீட்டில் இருந்து ஓவியாவிற்கு மருத்துவ முத்தம் கொடுத்து வெளியே அனுப்பிய ஆரவ் அங்கு எந்தவித வருத்தமும் இல்லாமல் ஜாலியாக வலம் வருகிறார். இதனை சினேகன் ரைசாவிடம் சொல்லி வருத்தப்படும் வீடியோ ஒன்றை புரோமோவாக வெளியிட்டுள்ளனர்.


 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்த ஓவியா அங்கு பலபேருடைய புறக்கணிப்பை தாங்கிகொண்டார். ஆனால் தான் காதலித்த ஆரவின் புறக்கணிப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் மன அழுத்தம் காரணமாக அங்கிருந்து வெளியேறினார்.
 
அவரது வெளியேற்றத்துக்கு பின்னர் சினேகனும், ரைசாவும் தங்கள் தவறுகளை நினைத்து மனம் வருந்தி அழுதார்கள். வேறு யாரும் அழுததாக தெரியவில்லை. மிகவும் நெருக்கமாக பழகிய மருத்துவ முத்தம் கொடுத்த ஆரவ் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் ஜாலியாக பிக் பாஸ் வீட்டில் வலம் வருகிறார்.
 
இந்நிலையில் ஆரவின் இந்த செயல்பாடுகளை கவணித்த சினேகன் ரைசாவிடம், ஒரு பொண்ணை இப்படியொரு நிலைமையில் அனுப்பிவிட்டு இவனால எப்படி இவ்ளோ சந்தோசமா எப்படி இருக்க முடியுது. அந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு, ஏதாச்சுன்னு தெரியாம இப்படி இவ்ளோ இயல்பா இருக்க முடியுது என தனது ஆதங்கத்தை ரைசாவிடம் கொட்டித்தீர்தார் சினேகன்.