வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 9 டிசம்பர் 2023 (07:20 IST)

மழையில் பெரும் சேதத்துக்கு உள்ளான ஹாரிஸ் ஜெயராஜின் வீடு & ஸ்டுடியோ!

சென்னையை சூரையாடிய மிக்ஜாம் புயல் கரையைக் கடந்து 5 நாட்களுக்கு மேலாகிவிட்டாலும், இன்னமும் அது சென்னையில் உருவாக்கி சென்ற பாதிப்புகளின் தாக்கம் குறையவில்லை. பல இடங்களில் குடியிருப்புகள் வெள்ள நீரில் மிதந்து கொண்டிருக்கின்றன. அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பலரின் வீடுகளும் மழைநீரால் சூழப்பட்டன. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜின் வீடு மற்றும் ஸ்டுடியோ இரண்டும் வெள்ள நீர் புகுந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹாரிஸ் ஜெயராஜின் வீட்டில் விலையுயர்ந்த கார்கள் அண்டர்கிரவுண்ட் பார்க்கிங்கில் நிறுத்தப் பட்டிருந்த நிலையில் அவையெல்லாம் சேதமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மிகப்பெரிய அளவில் பொருளாதாரா இழுப்புக்கு ஆளாகியுள்ளார் என சொல்லப்படுகிறது.