ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 17 செப்டம்பர் 2020 (11:43 IST)

ரிஷபம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதம்) - கிரகநிலை: ராசியில்  ராஹூ - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில்  சந்திரன் -  பஞ்சம  ஸ்தானத்தில் சூர்யன்,  புதன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சனி - விரைய ஸ்தானத்தில் செவ்வாய்(வ)   என கிரகங்கள்  வலம் வருகின்றன.

பலன்:
இந்த மாதம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள்  கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது.  பணவரத்து இருக்கும்.
 
அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். தொகுதியில் மதிப்பு கூடும். கோஷ்டிப் பூசலையும் தாண்டி சாதிப்பீர்கள். 
 
கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். பொது நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குமளவுக்குப் பிரபலமாவார்கள். நல்ல வாய்ப்புகள் வரும். உங்கல்  முன்னேற்றத்திற்கு பாதை வகுக்கும் காலமாக இருக்கும்.
 
மாணவர்களுக்கு  கல்வியில் மேன்மை அடைய கூடுதல்  கவனத்துடன்  படிப்பது அவசியம்.
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும்.
 
ரோகிணி:
இந்த மாதம் பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக  முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது  நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள்.
 
மிருகசிரீஷம் 1, 2, பாதம்:
இந்த மாதம் மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த  பிரச்சனைகளில் சாதகமான  நிலை காணப்படும்.
 
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 18, 19; அக்டோபர் 15, 16.