ரிஷபம்: சித்திரை மாத ராசி பலன்கள் 2021

Rishabam
கிரகநிலை: ராசியில் ராஹூ - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில்  குரு (அ.சா) - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன், சந்திரன் என கிரக அமைப்பு உள்ளது.

பலன்:
மிடுக்கான நடையும் நேர் கொண்ட பார்வையும் எடுத்த கொள்கையில் மாறாதவர்களுமான ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் பிறரின் நட்பை பயன்படுத்தி எதையும்  செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள். உங்களிடம் ஆளக்கூடிய திறமை இருக்கும். இந்த மாதம் வீண் அலைச்சல் குறையும். சிக்கல்கள் தீரும். நக்ஷத்ராதிபதி  செவ்வாய் உச்சம் பெறுவதன் மூலம் எண்ணிய காரியம் கைகூடும் குறிக்கோள் நிறைவேறும்.
 
சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும்.  தொழில் வியாபாரத்தில் மாற்றம் செய்ய எண்ணுவீர்கள். சிலர் புதிய தொழில் தொடங்க முற்படுவார்கள். அவர்கள் கவனமாக  செயல்படுவது நல்லது.  வாடிக் கையாளர்களின் தேவைகளை சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் உண்டாகும்.  குறிக்கோளை அடைவது லட்சியமாக கொண்டு செயல்படுவீர்கள். புதிய தொடர்புகள் மூலம் லாபம் கிடைக்கும்.
 
கணவன்மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதங்கள் உண்டாகலாம்.  வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு வெளியே தங்க நேரிடலாம்.  வீண்செலவுகள்  ஏற்படும்  வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உஷ்ணம் சம்பந்தமான நோய் உண்டாகலாம். அடுத்தவரை பார்த்து எதையும் செய்ய தோன்றலாம்.  அதனை விட்டு விடுவது நல்லது.
 
பெண்களுக்கு எண்ணிய காரியம் கை கூடும். வீண் அலைச்சல் குறையும் சிக்கலான பிரச்சனைகளில் நல்ல முடிவு கிடைக்கும்.
 
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் எளிதில் கிடைக்கக் கூடிய காலகட்டம் என்பதால் நீங்கள் பெரும் முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லாமலேயே  வாய்ப்புகள் தேடி வரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் முழுமையாகப் படித்துப் பார்த்து கையெழுத்திடுவது நல்லது. 
 
அரசியல்துறையினருக்கு உங்கள் தன்னலமற்ற  உண்மையான தொண்டின் காரணமாக தலைமையின் பாராட்டுகளையும் நன்மதிப்பையும் பெறுவீர்கள்.  உங்கள் மன  உறுதியும், விசுவாசமும் உங்களுக்குப் பொறுப்பான பதவிகளையும் பெற்றுத்தரும்.  உங்கள் பொருளாதார அந்தஸ்தும் உயரும். 
 
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் மதிப்பெண் பெற எண்ணுங்கள். அதற்கான முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம்  மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும்.  பணவரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால்  எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில்  இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.   சரக்குகளை  பாதுகாப்பாக வைப்பது நல்லது.
 
ரோகிணி:
இந்த மாதம்  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு  அதிகரிக்கும்.   எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும்,  குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள்  உங்கள்  சொல்படி நடப்பது  மனதுக்கு  மகிழ்ச்சி தரும்.
 
மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்:
இந்த மாதம்  சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி  கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால்  காரிய வெற்றி பெறுவார்கள்.  குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.
 
பரிகாரம்: தினமும் கோதுமை தூளை துவரம் பருப்புடன் கலந்து காகத்திற்கு வைக்க பிரச்சனைகள் குறையும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.
சந்திராஷ்டம தினங்கள்: மே - 1, 2
அதிர்ஷ்ட தினங்கள்: ஏப்ரல் - 24, 25, 26.


இதில் மேலும் படிக்கவும் :