திங்கள், 27 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வெள்ளி, 13 ஜூலை 2018 (12:29 IST)

மேஷம்: ஆடி மாத ராசி பலன்கள்

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே,




இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் சந்தித்து முறியடிக்கும் வல்லமையைப் பெறலாம். எந்த வேலையிலும் உங்கள் தனித்தன்மை வெளிப்படும். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். முன்னேற்றம் கண்டிப்பாக உண்டு என்பதை உறுதியாக சொல்லலாம்.

குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தின் தேவைகள் பூர்த்தியாகும். தூரத்தில் இருக்கும் உறவினரால் நன்மை ஏற்படும். கணவன், மனைவியரிடையே அவ்வப்போது பிரச்சனைகள் வந்து போகும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். தந்தை, தந்தை வழி உறவினர்கள் வழியே பிரச்சனைகள் வரலாம். நண்பர்கள் இடத்தில் மனக்கிலேசம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள் உடன் பண்புரிவோரிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். சிலர் எதிர்பாராத இட மாற்றத்தை சந்திக்கலாம். வேலைப்பளு மிக அதிகமாக இருக்கும். செய்யும் வேலையில் உங்கள் தனித் தன்மை வெளிப்படும். காரியங்களை செம்மையாக முடித்து வெற்றிகளைப் பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.

தொழிலதிபர்கள் சொந்தத் தொழில் புரிவோர் சிறிது சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியிருக்கும். எதிர்காலத்திற்கு தேவையான முறையான சேமிப்புகளுக்கான ஏற்பாடுகளை செய்வீர்கள். தொழில்,  வீடு, நிலம் ஆகியவற்றில் இருந்து வந்த சுணக்க நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்படும். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.
பெண்கள் சுபச் செலவு உங்களால் ஏற்படும். பெண்கள் குடும்ப ஒற்றுமைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியிருக்கும். பொதுநல சேவை செய்ய ஆர்வம் அதிகரிக்கும். ஆகையால் பாராட்டு, புகழ் கிடைக்கும். உணவு, பழக்க வழக்கங்களை ஒழுங்கு படுத்தி அதனால் வரும் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள்.

கலைஞர்கள் கலைத்துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அதனால் பொருளாதாரரீதியாக சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்கும். பிறமொழி, இனத்தவரின் ஆதரவு, ஒத்துழைப்பு உங்கள் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும்.அரசியல்வாதிகள் பொது நல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். நல்லோர் ஆதரவு கிடைக்கப் பெற்று நற் காரியங்களில் ஈடுபட்டு அதனால் சில காரியங்கள் வெற்றி அடையலாம். சக நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமல்லாமல் அனுசரனையாக இருப்பதும் தான் உங்களுடைய வெற்றிக்கு வடிகோலாக அமையும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை எடுக்க வேண்டும். கேட்பார் பேச்சைக் கேட்டு விளையாட்டுத் தனமாக இருத்தல், எதிர்காலம் முழுவதையும் இருட்டாக அமைத்திடும். எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் பெற்றோர் அதிக அக்கறை காட்டுவார்கள். அதைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு மரியாதை கொடுங்கள்

பரிகாரம்: சனிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்