ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (17:20 IST)

துலாம்: ஆனி மாத ராசிப் பலன்கள்

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி(வ), கேது - அஷ்டம ஸ்தானத்தில்  சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
திடீரென்று உணர்ச்சி வசப்பட்டு கவலைப்படும் துலா ராசி அன்பர்களே, இந்த மாதம் சில குழப்பங்கள் நேர்ந்தாலும் இதுவரை நடக்காமல்  இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும்.  முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.
 
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு  திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆடம்பர செலவுகள்  அதிகரிக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் பெறுவதில் தாமதம் உண்டாகும். வரவு இருந்த போதிலும் வியாபாரம்  தொடர்பாக திடீர் செலவு உண்டாகலாம்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய பதவிகள் தொடர்பான விஷயங்கள் தாமதப்பட்டாலும் பொறுப்புகள்  அதிகரிக்கும். வரவேண்டிய பணவரவுகள் இருப்பின் அது வந்து சேரும்.
 
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான காலகட்டம். எதிர்பார்க்கும் இடங்களில் இருந்து வாய்ப்புகள் வரலாம்.  உடனிருப்பவர்களால் நல்ல ஆதாயம் ஏற்படும்.
 
அரசியல் வாதிகள் தக்க சமயத்தில் காரியங்களை சாதித்துக் கொள்ள முடியும். பிரச்சினைகளில் இருந்து சற்று தள்ளியே நில்லுங்கள்.  இப்போதைக்கு எதிலும் தலையிட வேண்டாம்.
 
பெண்களுக்கு  தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து குறையலாம். உடல் நலத்தில்  சிறிது அக்கறை செலுத்தவும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மை தரும். திறமை வெளிப்படும்.
 
சித்திரை 3, 4 பாதம்:
 
இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேரும் நாள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு  மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது.  சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும். 
 
சுவாதி:
 
இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். சனி சஞ்சாரத்தால் ஒரு பிரச்சினை  முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும்  தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம். 
 
விசாகம் 1, 2, 3ம்  பாதம்:
 
இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள்  பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும். 
 
பரிகாரம்: பெருமாள் கோவிலில் உள்ள சக்கரத்தாழ்வாரை 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 30, ஜூலை 1
அதிர்ஷ்ட தினங்கள்: ஜூன் 23, 24.