திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Updated : புதன், 18 நவம்பர் 2020 (10:03 IST)

என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிவ: ‘நெற்றிக்கண்’ டீசர்

என் கண்ணுக்கு நீ மட்டும் தான் தெரிவ: ‘நெற்றிக்கண்’ டீசர்
நடிகை நயன்தாரா நடித்துவரும் ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் டீசர் இன்று காலை வெளியாக இருப்பதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் விக்னேஷ் சிவன் இந்த டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
இந்த டீசர் ஆடு-நரி கதையைக் நயன்தாராவின் கேரக்டர் கூறுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு நிமிட டீஸரை பார்க்கும் போது படம் நயன்தாராவுக்கு மற்றுமொரு சூப்பர் ஹிட் படம் உறுதியாகி விட்டது என்பது தெரிகிறது
 
பார்வையற்ற மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருக்கும் நயன்தாராவின் நடிப்பு வேற லெவலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ரத்தக்கறையுடன் சாலையில் இருந்து எழும் அட்டகாசமான அவரது நடிப்பு அவரை எங்கே கொண்டுபோய் சென்று விட்டது என்றுதான் கூறவேண்டும் 
 
கிரிஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை அதிர வைக்கும் வகையில் உள்ளது. ஏற்கனவே ’அவள்’ என்ற திகில் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் தான் இந்த படத்தை இயக்கி உள்ளார் என்பதும் விக்னேஷ் சிவன் இந்த படத்தை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது