1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 30 ஜூன் 2016 (19:17 IST)

’இளையராஜா’ இசையில் ’குற்றமே தண்டனை’ - ட்ரெய்லர்

விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா, நாசர், ரஹ்மான் ஆகியோர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘குற்றமே தண்டனை’. இந்த படத்தை ’காக்கா முட்டை’ திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கியுள்ளார்.
 

 
இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை ஒரு கொலையை மையப்படுத்தியது.
 
ஒரு மரணம் நிகழும் போது, அது அதனை சுற்றியுள்ள மனிதர்களை எப்படி பாதிக்கிறது என்பதை இயக்குநர் சொல்லியிருக்கிறார். கேரளா மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் திரையிட ’குற்றமே தண்டனை’ தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.
 
இந்தப் படத்துக்கு அவர், குற்றமும் தண்டனையும் என்றுதான் பெயர் வைத்திருந்தார். படத்திற்கு பின்னணி இசையமைத்த இளையராஜா, குற்றமே தண்டனை படத்துக்கு சரியான பெயராக இருக்கும் என சொல்ல, அதையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார்.
 
ட்ரெய்லர் கீழே: