திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2024 (08:48 IST)

துப்பறிவாளன் 2 ஷூட்டிங் லண்டனில் இல்லை… லொகேஷனை மாற்றிய விஷால்!

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென விஷால் மற்றும் மிஷ்கின் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மிஷ்கின் படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து மீதிப் படத்தை விஷாலே இயக்குவார் என அறிவிக்கப்பட்டது.

துப்பறிவாளன் 2 வின் லண்டன் படப்பிடிப்பு ஜனவரி 2022 ல் தொடங்கும் என அறிவித்திருந்தார் விஷால். ஆனால் கொரோனா வைரஸ் பரவலால் அங்கு லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் அப்போது நினைத்தபடி ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தை மே மாதம் லண்டனில் தொடங்க உள்ளதாக விஷால் அறிவித்திருந்தார்.

ஆனால் திடீரென லண்டன் செல்வதைப் படக்குழு தள்ளிவைத்தது. இந்நிலையில் லண்டன் செல்வதற்கு முன்பு சென்னையில் சில காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். அதன் பின்னர் முத்தையா இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிட்டுதான் துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங்குக்காக லண்டனுக்கு செல்ல உள்ளார்களாம்.