வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 16 நவம்பர் 2018 (14:59 IST)

நயன்தாரா போதும் , இனி பாலிவுட் நடிகையுடன் டூயட் - யோகி பாபு

ஜோதிகா நடிப்பில் இன்று வெளியாகியுள்ள காற்றின் மொழி படத்தில் இரண்டே காட்சிகளில் வந்தாலும், தன் பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கிறார் காமெடி நடிகர் யோகி பாபு. 
 
தமிழின் முன்னணி காமெடி நடிகர்கராக வளர்ந்துள்ளார் யோகி பாபு. கவுண்டமணி, வடிவேலு வரிசையில் தற்போது அவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அதிலும் கோலமாவு கோகிலா பட வெற்றியைத் தொடர்ந்து, ஒரு தலைக் காதல் காமெடி என்றால் யோகி பாபுவையே இயக்குனர்கள் தேர்வு செய்கிறார்களாம்.
 
அந்தவகையில் தான் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நாயகியாக நடித்துள்ள காற்றின் மொழி படத்திலும் கௌரவத் தோற்றத்தில் நடித்த யோகி பாபு. 
 
இந்த படத்திலும் ஒரு தலைக்காதலால் பீல் பண்ணும் கதாபாத்திரம் தான் அவருக்கு. கோலமாவு கோகிலாவில் நயனை ஒரு தலையாகக் காதலித்தவர், இதில் யாரை காதலிக்கிறார் எனக் கேட்டால் நமக்கேஷாக் ஆகிடும் 
 
பாலிவுட்டின் கனவுக்கன்னியான தீபிகா படுகோனேவைத் தான் இப்படத்தில் அவர் ஒருதலையாகக் காதலிக்கிறார். இவரால் தான் அவர் நடிகையாகிறாராம். பின்னர் முன்னணி நடிகையானதும் யோகிபாபுவைக் கழட்டி விட்டு விடுகிறாராம். 
 
இதையெல்லாம் ஜோதிகாவிடம் சொல்லிப் புலம்பும் யோகி பாபு, பின்னர் பாலிவுட்டெல்லாம் தனக்கு செட்டாகாது என மீண்டும் தமிழ் சினிமா பக்கமே திரும்பி விடுகிறார். இங்கு கீர்த்தி சுரேஷை காதலிப்பதாக படத்தில் வசனங்கள் இடம்பெற்றுள்ளது.