1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (14:56 IST)

இதெல்லாம் நான் அப்போவே செஞ்சுட்டேன்! மற்ற நடிகைகள் சொல்லத் தயங்கும் கேள்வி.! லைவ் சாட்டில் பதிலளித்த யாஷிகா.!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில்  பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
 

 
பிக் பாஸில் பங்குபெற்ற அவர் தனக்கான ஒரு தனிப்பட்ட ஆர்மியையும் உருவாக்கிக் கொண்டார். சொல்லப்போனால் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் ஓவியா எந்த அளவிற்கு பிரபலமடைந்தாரோ, அந்த அளவிற்கு யாஷிகா ஆனந்த் இரண்டாவது சீசனில் பிரபலமடைந்தார்.
 
அதற்கு பிறகு பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டீடிவாக இருக்கும் நடிகை யாஷிகா லைவ் சாட்டில் ரசிகர்களிடம் உரையாடினார் . அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் எப்போது தொப்புளில் வளையத்தை குத்தினீர்கள் என்று கேட்க, அதற்கு பதிலளித்த யாஷிகா ஆனந்த்  நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போதே என் தொப்புளில் வளையத்தை குத்தி விட்டேன் என்று ஒரு புகைப்படத்துடன் பதிலளித்துள்ளார்.
 
மேலும் இன்னொரு ரசிகர் ஒருவர் ‘எப்படி உங்கள் எடையை பராமரிக்கிறீர்கள் ஏதாவது சிகிச்சை செய்தீர்களா’ என்று கேட்க, அதற்கு யாஷிகா ‘நான் 62 கிலோ இருக்கிறேன் என்னை பார்த்து நீங்கள் சர்ஜரி செய்து இருக்கீங்களா என்று கேட்கிறீர்களே’ என்று சிரித்தபடியே பதில் அளித்தார்.
 

 
தற்போதுள்ள நடிகைகள் பெரும்பாலும் வெளியில் சொல்ல தயங்கும் விஷயத்தையெல்லாம் நடிகை யாஷிகா இப்படி ஒபன்ஸ் அப் செய்துவிட்டார் என முணு முணுத்து வருகின்றனர்.