திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 செப்டம்பர் 2018 (13:51 IST)

யாஷிகா வெளியேற்றம் ; விஜய் டிவி எப்போதும் ஏமாற்றுகிறது : நடிகை ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாஷிகாவை வெளியேற்றியது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என நடிகை ஸ்ரீப்ரியா கருத்து தெரிவித்துள்ளார்.

 
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அறிமுகமான நடிகை யாஷிகா ஆனந்த் கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். எந்த தொடர்பும் இன்றி 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பது பிக்பாஸ் விளையாட்டின் முக்கிய விதி. தொடக்கம் முதலே பக்குவப்பட்டவராக செயல்பட்டார் யாஷிகா. 
 
ஆனால், கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்த பலருக்கும் இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஐஸ்வர்யாவுக்கு டைட்டில் வின்னர் கொடுப்பதற்காகவே யாஷிகாவை பிக்பாஸ் வெளியேற்றிவிட்டார் என செய்திகள் பரவி வருகிறது.
 
இந்நிலையில், இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீபிரியா “யாஷிகா வெளியேற்றம் எதிர்பார்க்கவில்லை. அவர் ஒரு நேர்மையான குழந்தை. அவருக்கு அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்” என டிவிட்டில் வாழ்த்து தெரிவித்தார்.
 
மற்றொரு பதிவில் “விஜய் தொலைக்காட்சி பல முறை எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சத்தியபிரகாஷ் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கவில்லை. அதுபோல், பிக்பாஸ் வீட்டிலிருந்து யாஷிகா வெளியேற்றமும் எனக்கு ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது” என பதிவிட்டுள்ளார்.