வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (09:01 IST)

டாக்ஸிக் படத்துக்காக கெட்டப்பை மாற்றிய நடிகர் யாஷ்!

யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போதுதான் யாஷ் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பெங்களூருவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தில் யாஷின் சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. நயன்தாரா சில பாலிவுட் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கேஜிஎஃப் படங்களுக்காக நீளமான தலைமுடியோடு காணப்பட்ட யாஷ், இப்போது டாக்ஸிக் படத்துக்காக முடிவெட்டு கெட்டப்பை மாற்றியுள்ளார். படத்தின் பூஜை நிகழ்வில் அவர் இந்த கெட்டப்போடு தோன்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.