ஞாயிறு, 8 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 24 ஜூலை 2024 (10:00 IST)

யாஷின் அடுத்த படத்தை தயாரிக்கும் விஜய் பட தயாரிப்பு நிறுவனம்!

கன்னட சினிமாவுக்கு மட்டும் தெரிந்த நடிகராக இருந்த யாஷை கேஜிஎஃப் படங்கள் இன்று பேன் இந்தியா நடிகராக்கியுள்ளன. யாஷ் நடிப்பில் கே ஜி எஃப் 2 ரிலிஸாகி கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னும் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை யாஷ் தொடங்கவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அவர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்ற படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. கேவிஎன் ப்ரடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கே ஜி எஃப் மற்றும் கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களை அடுத்து யாஷ் நடிக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் நடிக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாகவும் இயக்குனர் உள்ளிட்ட மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.