மீண்டும் படம் தயாரிக்கும் மாஸ்டர் தயாரிப்பாளர் – ஹீரோ யார் தெரியுமா?
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ அடுத்த படத்தயாரிப்புக்கான முனைப்பில் உள்ளார்.
மாஸ்டர் படத்தின் மூலம் பல ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தயாரிப்பில் இறங்கினார் விஜய்யின் மாமாவான சேவியர் பிரிட்டோ. இவர் ஏற்கனவே விஜய்யின் ஆரம்பகால படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார். அதற்கான நன்றிக்கடனாகதான் விஜய் அவருக்கு மாஸ்டர் படத்தின் வாய்ப்பை அளித்தார்.
இந்நிலையில் இப்போது அவர் மீண்டும் வரிசையாக படங்களை தயாரிக்கும் ஆர்வத்தில் உள்ளாராம். அடுத்த படத்தில் தனது மகளின் கணவரும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷை கதாநாயகனாக வைத்து தயாரிக்க உள்ளாராம். அதுமட்டுமில்லாமல் மற்றொரு படத்தில் தனது நீண்டகால நண்பரான திண்டுக்கல் லியோனியின் மகனைக் கதாநாயகனாக்க உள்ளாராம்.