வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (13:29 IST)

சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை புகழ்ந்த WWE வீரர் John Cena

sharh rukh khan-john cena
பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர்,  தீபிகா படுகோன்,  ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து நடித்தது,  கடந்தாண்டு வெளியான படம் பதான். 
 
இப்படம்   ஆயிரம் கோடிக்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்து, பாலிவுட் சினிமாவுக்கும் இந்திய சினிமாவுக்கும் பெருமை ஈட்டித்தந்தது.
 
இதையடுத்து ஷாருக்கான், விஜய்சேதுபதி,நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ஜவான்.இப்படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இப்படம் வசூலீட்டி சாதனை படைத்தது.
கடந்தாண்டு இறுதியில் ஷாருக்கானின் டுங்கி படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. 
 
இந்த நிலையில், நடிகர் ஷாருக்கான் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் போட்டோவை தன்  சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
 
இது வைரலானது. இந்த நிலையில், பிரபல மல்யுத்த வீரரும்( WWE), நடிகருமான ஜான் சீனா ( John Cena), தில் தோ பகல் ஹை என்ற படத்தில் இடம்பெற்ற  போலி சி சூரத் என்ற ஷாருக்கானின் பாடலைப் பாடினார். இதைப்பார்த்த ஷாருக்கான் மகிழ்ச்சியடைந்தார்.
 
மேலும், என் சமீபத்திய படப் பாடல்களையும் உங்களுக்கு அனுப்புகி றேன். அதற்கு நீங்கள் நடனம் ஆட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.