விஜய் சேதுபதியுடன் நெருக்கமான காட்சியில் நடித்த சாந்தினி
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் கவண் படத்தில் சாந்தினி நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.
கவண் படத்தில் மடோனா செபஸ்டியன் நாயகி. சாந்தினி படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் விஜய் சேதுபதியுடன் காலேஜில் படிக்கிறவராக வருகிறார். சின்ன வேடம், ஆனால் படத்தில் திருப்புமுனை ஏற்படுத்தும் கதாபாத்திரம் என சாந்தினி தெரிவித்தார்.
விஜய் சேதுபதி, சாந்தினி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நெருக்கமானவை. ஆனால் முகம் சுழிக்க வைக்கும்படி இல்லாமல் அழகாக அந்தக் காட்சிகளை கே.வி.ஆனந்த் எடுத்துள்ளார் என சாந்தினி கூறினார்.