புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 15 பிப்ரவரி 2021 (22:07 IST)

அந்த நடிகருடன் இணைந்து நடிப்பீர்களா..? ரசிகரின் கேள்விவிக்கு சூப்பர் ஸ்டார் பதில்

மலையாள சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் மோகன்லால். இவர் மலையாள சினிமாப் படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட், கோலிவுட்,டோலிவுட் என்று அனைத்து சினிமா உலகிலும் கால் பதித்து வெற்றி பெற்றவர்.

ஏற்கனவே மணிரத்னம் இயக்கிய இருவர் என்ற படத்தில் எம்.ஜி.ஆர் வேடத்தில் நடித்துக் கவனம் பெற்ற இவர் உன்னைப்போல் ஒருவன் என்ற கமல் படத்தில் ரீ எண்ட்ரீ கொடுத்தார்.

அதன்பிறகு, புலிக்குட்டி என்ற படம் ரூ.100 கோடி வசூல் ஈட்டியது. சில வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் நடிகர் பிரிதிவிராக் இயக்கிய லூசிபர் வசூலை வாரிக்குவித்தது.

இந்நிலையில், தற்போது த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்துள்ள மோகன் லால் அடுத்த படம் குறித்து விரைவில் அறிவிக்கவுள்ளார். இந்நிலையில், இன்று டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் அவரிடம் நீங்கள் அக்‌ஷய்குமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் ... அப்படத்தை இயக்குநர் பிரியதர்சன் இயக்க வேண்டும் எனக் கூறினார்.

இது கூடிய விரைவில் நடக்கும் என்று மோகன்லால் பதில் கூறியுள்ளார்.