ஒரே டீசரில் ஓஹோனு உயர்ந்த காஜல்: டஃப் கொடுப்பாரா நயன்?
பாலிவுட்டில் கங்கனா நடிப்பில் வெளியான குயின் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசர் நான்கு மொழிகளில் வெளியானது. தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, மலையாளத்தில் மஞ்சிமா மோகன் மற்றும் கன்னடத்தில் பருல் யாதவ் நடித்துள்ளனர்.
தமிழில் காஜல் அகர்வால் நடித்துள்ள படத்திற்கு பாரீஸ் பாரீஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த டீசரில் வெளியான குறிப்பிட்ட காட்சி சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தின் டீசர் ரெகார்டை காஜலின் பாரீஸ் பாரீஸ் முறியடித்துள்ளது. அதாவது, நயன்தாராவின் டீசரை 60 லட்சம் பேர் பார்த்துள்ள நிலையில், காஜல் அகர்வாலின் டீசரை 72 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
அடுத்து வரும் 5 ஆம் தேதி நயன்தாராவின் ஐரா டீசர் வெளியாகவுள்ள நிலையில் இது காஜல் டீசரின் பார்வையாளர்கள் கணக்கை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.