திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (13:20 IST)

வெளிநாட்டில் இந்தியன் 2 தாத்தா - வேகமெடுத்த படப்பிடிப்பு !

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் இரு வேடத்தில் நடித்து 1996ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன் 2 . 


 
இந்த படம் வெளியாகி வசூலை வாரி குவித்தது. அதனை தொடர்ந்து  தற்போது இந்த படத்தின் 2ம்  பாகத்தை கமலஹாசன் - காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து ஷங்கர் இயக்கிவருகிறார். இந்தியன் - 2 படத்திற்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணிகள் முடிந்து படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. 
 
இப்படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து AM ரத்னம் தயாரிக்கிறார்.  இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நடிகர் சிம்பு கௌரவ தோற்றத்தில் வருகிறார்.
 
இந்த படத்தின் வயதான கமலின் தோற்றத்திற்காக ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் சென்னைக்கு வந்து கமல்ஹாசனை வயதான தோற்றத்துக்கு மாற்றி மேக்கப் டெஸ்ட் மற்றும் படம் எடுத்தனர். அந்த தோற்றம் கமலுக்கு கச்சிதமாக பொருந்தி இருப்பதாக ஷங்கர் கூறினார் .
 
இந்நிலையில் தற்போது , பொள்ளாச்சி படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தகட்டமாக ஈஸ்டர்ன் ஐரோப்பிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 
 
மேலும் ஒரு சில காட்சிகளை உக்ரைனில்  எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள்தெரிவிக்கிறது. 
 
இந்தியன் 2 படப்பிடிப்பு ஜனவரி 18 ம் தேதி பொள்ளாச்சியில் ஆரம்பமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.