புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 11 செப்டம்பர் 2021 (15:13 IST)

மாநாடு தீபாவளி ரிலீஸ்… எந்த அளவுக்கு சாத்தியம்!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித்தின் வலிமை திரைப்படமும் தீபாவளிக்கு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. இதனால் இவ்விரு படங்களுக்குமே திரையரங்கங்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் இப்போது புதிதாக மாநாடு திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள மாநாடு திரைப்படம் தனியாக அதிக திரைகளில் ரிலீஸானால் மட்டுமே லாபம் பார்க்க முடியும் என்ற நிலையில் இப்போது ரஜினி மற்றும் அஜித் படங்களோடு மோதும் ரிஸ்க்கை எடுப்பது ஏன் என்று சிம்பு ரசிகர்களே குழம்பியுள்ளனர். ஆனால் இன்னொரு தரப்பினரோ இப்போது சும்மா அறிவித்து எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டு கடைசி நேரத்தில் ரிலீஸில் இருந்து பின் வாங்கவே வாய்ப்பு அதிகம் என ஆருடம் கூறுகின்றனர்.