திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 மே 2020 (20:03 IST)

சந்திரமுகி 2ல் ஜோதிகா உண்டா? ரசிகர்களுக்கு எழுந்த சந்தேகம்!

விரைவில் உருவாக இருக்கும் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரஜினியின் தீவிர ரசிகராகவும், நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்ட ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சந்திரமுகி முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இயக்க இருக்கிறார். இதை நடிகர் லாரன்ஸ் என்பதை அதிகாரப்பூர்வமாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ராகவா லாரன்ஸ் அந்த படத்துக்காக தான் வாங்கிய அட்வான்ஸ் தொகையில் இருந்து மூன்று கோடியை கொரோனா நிவாரணத்துக்காக அளித்துள்ளதாக செய்தி வெளியானது. மேலும் சந்திரமுகியின் முன்கதையான வேட்டைய மன்னனுக்கும் சந்திரமுகிக்கும் இடையிலான மோதல்தான் கதை என சொல்லப்படுகிறது.

சந்திரமுகி படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்த ஜோதிகா இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜோதிகா இப்போது படங்களில் நடித்து வருவதால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என்றே சொல்லப்படுகிறது.