வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (16:06 IST)

ரெய்னாவுக்கு பதில் சி எஸ் கேவில் பதில் நம்பர் ஒன் டி 20 பிளேயர்? எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தகவல்!

சென்னை அணியில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் மலன் ரெய்னாவுக்குப் பதில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்த வரை தல தோனி என்றால் தளப்தி ரெய்னாதான். தோனியின் ஓய்வுக்குப் பின் அணியை வழிநடத்த போவதே அவர்தான் என ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில் , துபாயில் பயிற்சிக்காக சென்றிருந்த ரெய்னா திடீரென இந்தியா கிளம்பி வந்தார். இது சம்மந்தமாக பல சர்ச்சைகள் உருவாகி பிறகு சமாதானப் பேச்சுகள் எழுந்தன. ஆனால் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அதனால் எப்படியும் இந்த ஆண்டு ரெய்னா விளையாடுவது சந்தேகம் என்ற சூழல் உருவாகி உள்ளது. இந்நிலையில் இப்போது ரெய்னாவுக்கு பதில் அணியில் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி டி 20 தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்தைச் சேர்ந்த மலன் சி எஸ் கேவில் இணைய உள்ளார் என சொல்லப்பட்டது. ஆனால் அதை அணியின் மேலாளர் காசி விஸ்வநாதன் மறுத்துள்ளார்.