ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (21:27 IST)

வையாபுரி அழுதது இதுக்குத்தானா? புஸ்ஸான பிக்பாஸ்

கமல்ஹாசன் நடத்தும் பிக்பாஸ் என்று கூறினாலும் முதல் நாளில் காணாமல் போன கமல் இன்னும் பிக்பாஸை எட்டி பார்க்கவே இல்லை. ஒருவேளை விஸ்வரூபம் 2' படப்பிடிப்புக்கு சென்றுவிட்டாரோ என்னவோ!



 
 
சரி அதெல்லாம் இருக்கட்டும், இன்றைய புரமோ வீடியோவில் காயத்ரி ரகுராம் எச்சைங்க என்று திட்டுவதும், அதற்கு வையாபுரி அழுவதுமாக இருந்தது. எனவே வையாபுரியை காயத்ரி திட்டியதால் தான் அவர் அழுததாக அனைவரும் நினைத்தனர்.
 
ஆனால் வையாபுரி அழுதது அதற்கில்லையாம். மனைவி மற்றும் பிள்ளைகள் நினைப்பு வந்ததால்தான் தேம்பி தேம்பி அழுதாராம். மேலும் கல்யாணம் ஆகி இத்தனை வருசத்தில் தன்னுடைய மனைவியை தான் புரிந்து கொள்ளவே இல்லை என்றும் வேலையில்லாத கோபத்தை வெளியில் காட்ட முடியாமல் வீட்டில் காட்டியதாகவும் அவர் அழுதுகொண்டே கூறினார். 
 
மேலும் இன்றைய பிக்பாஸில் அடிக்கடி கேமிரா நகரும் காட்சிகளும் இருந்ததால் இது ரியாலிட்டி ஷோவா? இல்லை வழக்கமான சீரியல்களில் இதுவும் ஒன்றா? என்று டுவிட்டரில் பலர் கேள்வி கேட்டு வருகின்றனர்.