வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2024 (11:03 IST)

அமரன் படத்தில் முகுந்தின் சாதிய அடையாளத்தை காட்டாதது ஏன்? - இயக்குனர் விளக்கம்!

அமரன் திரைப்படத்தில் முகுந்த் வரதராஜனின் சாதிய அடையாளம் உள்ளிட்டவை காட்டப்படாதது குறித்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

 

 

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘அமரன்’. இந்திய ராணுவ வீரரான மறைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியான நிலையில் அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

அதேசமயம் படத்தின் மீது சமூக வலைதளங்களில் சில விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது. முகுந்த் வரதராஜனின் சமுதாய அடையாளம் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக சிலர் விமர்சித்து வந்த நிலையில் அதுகுறித்து நேற்று நடந்த அமரன் வெற்றி விழாவில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.
 

 

அதில் அவர் “முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என திட்டமிட்ட பின் அவரது மனைவி மற்றும் தாய், தந்தையரை சந்தித்து பேசினோம். அவர்கள் முந்திற்கு தமிழன், இந்தியன் என்ற அடையாளத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என விரும்பினார்கள். ஒரு நாட்டு பற்றாளனாக நாட்டுக்காக உயிர்நீத்த வீரரை ஒரு சமுதாய அடையாளத்திற்குள் சுருக்குவது சரியாக இருக்காது என்பதால் அதை தவிர்த்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K