படப்பிடிப்பு தளத்தை விட்டு கார்த்திக் நரேன் வெளியேறியது ஏன்? பரிதாபகரமான காரியம்!
நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்துள்ளது.
தனுஷ் நடிப்பில் தனுஷ்43 படத்தை நரேன் கார்த்திகேயன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனுஷ் மற்றும் கார்த்திக் நரேனுக்கு இடையே கருத்து மோதல் ஏற்பட்டு கார்த்திக் நரேன் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறி விட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் இதை மறுக்கும் விதமாக சத்யஜோதி பிலிம்ஸ் ஷுட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் மற்றும் கார்த்திக் நரேன் ஆகியோர் விவாதிக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் கார்த்திக் நரேன் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறியது உண்மைதான் என்றும் அதற்குக் காரணம் அவருக்கு ஏற்பட்ட கடுமையானக் காய்ச்சல்தான் என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டதால் ஸ்டண்ட் இயக்குனர்களுக்கே அதிக பணி என்பதால் இயக்குனரை ஓய்வெடுத்துக் கொள்ள சொல்லி படக்குழு அனுப்பியுள்ளதாம். அதற்குள் வேறுவிதமாக வதந்திகள் திரையுலகில் பரவி விட்டன.