திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 10 ஜூலை 2021 (15:41 IST)

நடிகர் தனுஷ் படத்திலிருந்து இயக்குநர் விலகல் ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகவுள்ள தனுஷ்43 படத்திலிருந்து பிரபல இயக்குநர் விலகியுள்ளதாக வதந்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான படம் ஜகமே தந்திரம். இப்படம் பெரும் வெற்றி பெற்றது.

இந்நிலையில், அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் படம் உருவாகவுள்ளது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் தனுஷ்43 படத்தை நரேன் கார்த்திகேயன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தை அவர் இயக்கிவருவதாகவும் அவருக்கு துணையாக சுப்பிரமணிய சிவா உதவிவதாகவும் கூறினர்.

இந்நிலையில், கார்த்திக் நரேன் மற்றும் நடிகர் தனுஷிற்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை; தனுஷ்43  படத்தில் இருவரும் இணைந்து பணிபுரிவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்த ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.