'முதல்வன் 2' படத்தில் விஜய்?- ஷங்கர் பதில்
தளபதி விஜய் சர்கார் வெற்றியை தொடர்ந்து, தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கவுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் முதல்வன் 2 படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பிரபல இணைய தளத்துக்கு இயக்குனர் ஷங்கர் அளித்த பேட்டியில், ''அந்தந்த காலக்கட்டத்தில் என்னைச்சுற்றி நடக்கக்கூடிய விஷயங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறேன். அது ஒரு கதையாக பார்மாகி என்னைத் தொந்தரவு செய்யும் பட்சத்தில் படமாக எடுப்பேன்.
அது ஒரு சோஷியல் படமாக இருக்கலாம் இல்லை அரசியல் படமாக இருக்கலாம். அந்தக் கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு அந்தப்படத்தை இயக்குவேன். அது ரஜினி சாரை டிமாண்ட் பண்ணா ரஜினி சாரை வச்சு எடுப்பேன். கமல் சாரை டிமாண்ட் பண்ணா கமல் சாரை வச்சு எடுப்பேன். விஜய்ய டிமாண்ட் பண்ணா விஜய்ய வச்சு எடுப்பேன். கதை யாரை டிமாண்ட் பண்ணுதோ அவங்களை வச்சு எடுப்பேன்,'' இவ்வாறு இணைய ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.