1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (17:14 IST)

விஜய், சிம்புவின் படங்களுக்கு வரவேற்பு கொடுங்கள் - தயாரிப்பாளர் !

வரும் ஜனவரி 13 ஆம் தேதி விஜய்யின் ’மாஸ்டர் ’திரைப்படமும்,சிம்புவின் ’ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இவ்விரு நடிகர்களின் படங்கள் வெளியாவதற்கு வரவேற்புக் கொடுங்கள் என சிம்புவின் மாநாடு படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா மற்றும் பலர் நடித்துள்ள ஈஸவரன் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே கட்டமாக முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று படக்குழு தீவிரமாக உழைத்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் சுசீந்தரன் 26 நாட்களில் படமாக்கி முடித்துள்ளார்.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்துக்கான இசையமைப்புப் பணிகள் எல்லாம் முடிந்துள்ளதாக அந்த படத்தின் இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ‘நம்பி வாய்ப்பளித்த எஸ்டிஆருக்கும் ஆதரவு அளித்த ரசிகர்களுக்கும் நன்றி. பிஸ்னஸ் மேன் படத்துக்குப் பின்னர் நான் சீக்கிரமாக முடித்த படம் ஈஸ்வரன்தான்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

எனவே, இப்படத்தில் இசை வெளியீடு எப்போது என சிம்புவின் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது, இப்படத்தின் இசை வெளியீடுவரும் ஜனவரி 2 ம் தேதி நடைபெறும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  ஜனவரி 13 ஆம் தேதி விஜய்யின் ’மாஸ்டர் ’திரைப்படமும்,சிம்புவின் ’ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகவுள்ளது குறித்து மாநாடு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில்  கூறியுள்ளதாவது :

சினிமா துளிர்க்க, மக்களை திரையரங்குக்கு இழுக்க மிகப் பெரிய சக்தி தேவை. கடற்கரை, கடைகள் நிரம்பி வழிகின்றன. திரையரங்கும் நிரம்ப வேண்டும். அதற்கு ஈர்ப்புச் சக்திகளாக இறங்க வரும் #Master க்கும் #Eeswaran க்கும் மிகப் பெரிய வரவேற்பு கொடுங்கள் மக்களே

@actorvijay
@SilambarasanTR_
எனத் தெரிவித்துள்ளார்.