செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (16:58 IST)

தமிழ் சினிமாவுக்கு நல்ல படங்களை கொடுப்போம் - கமல் போக்ரா!

விஜய் ஆண்டனி ,ஆத்மிகா  நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் TD  ராஜா தயாரிக்கும் கோடியில் ஒருவன் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு ஆதரவு அளித்த மக்களுக்கும் , பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பட  கோடியில் ஒருவன் படக்குழு மற்றும் பலர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.
 
அந்த விழாவில் பட அனுபவங்களை குறித்து பகிர்ந்துகொண்ட கமல் போக்ரா... 
 
வந்தாரை வாழவைக்கும், வாய்ப்புகளை வாரி வழங்கும் இந்த தமிழ்நாட்டிற்கும்,  வெற்றித் தயாரிப்பாளராக்கிய தமிழ் சொந்தங்களுக்கும் கோடி நன்றிகள்!!! இந்த தமிழ் சினிமாவிற்கு, இனி தரமான படங்கள் தருவதே எமது நன்றிக் கைமாறு!
 
இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த மிகப்பெரிய வெற்றியடைய செய்த  ஊடக நண்பர்களுக்கு கோடான கோடி நன்றி.கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்காக பல நல்ல படங்களை கொடுப்போம் என உறுதியளித்தார்.