விஜயகாந்தை போன்றவர் விஜய் ஆண்டனி… ஓவரா புகழ்ந்த தயாரிப்பாளர்!
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கி வைத்துள்ளவர் நடிகர் விஜய் ஆண்டனி.
இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறி அதில் ஒரு வெற்றிப்பாதையை அமைத்துக் கொண்டவர் விஜய் ஆண்டனி. இப்போது அவர் சுத்தமாக இசையமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டார். இந்நிலையில் அவர் நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது.
அந்த படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் டி சிவா, விஜய் ஆண்டனி நடிகர் விஜயகாந்தை போல உதவும் குணம் கொண்டவர். தயாரிப்பாளர் சங்கத்துக்காக இலவசமாக ஒரு படத்தை நடித்துத் தருகிறேன் என்று கூறியுள்ளார். அந்த படத்துக்கான வேலைகள் டிசம்பரில் தொடங்கும் எனக் கூறியுள்ளார்.