ஐஸ்வர்யா ராய் பற்றி இழிவான மீம்ஸ் – மன்னிப்புக் கோரினார் விவேக் ஓப்ராய் !
ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் விதமாக் மீம்ஸ் ஒன்றை டிவிட்டரில் வெளியிட்ட விவேக் ஓப்ராய் அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகி கொண்டிருந்த நிலையில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மீம்ஸ் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். ஐஸ்வர்யாராய் ஆரம்பகாலத்தில் விவேக் ஓபராயை காதலித்ததாக கூறப்படும் நிலையில் அவர் பதிவு செய்த டுவீட் அருவருப்பாகவும், அநாகரீகமாகவும் இருந்ததாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஒரு பெண்ணை இந்த அளவுக்கு யாராலும் இழிவுபடுத்த முடியாது என்றும் பலர் காட்டமாகவே விவேக் ஓபராயை விமர்சனம் செய்தனர்,.
இந்த நிலையில் விவேக் ஓபராயின் இந்த சர்ச்சைக்குரிய மீம்ஸ் தொடர்பாக விளக்கம் கேட்டு தேசிய பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த நோட்டிஸூக்கு விவேக் ஓபராய் கொடுக்கும் விளக்கம் சரியானதாக இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய பெண்கள் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த மீம்ஸ் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் இப்போது அந்த மீம்ஸை விவேக் ஓப்ராய் நீக்கியுள்ளார். மேலும் அவர் ‘ சில நேரங்களில் முதல் தடவைப் பார்க்கும்போது சில விஷயங்கள் தவறாக தெரிவதில்லை. நான் ஒருபோதும் பெண்களை அவமரியாதை செய்பவனில்லை. அதனால் நான் பரிகாரமாக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.