செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: சனி, 13 மே 2017 (12:36 IST)

படத்தில் வில்லன்... நிஜ வாழ்க்கையில் ஹீரோ - விவேக் ஓபராயின் கருணை உள்ளம்

கடந்த ஏப்ரல் மாதம் 24ம் தேதி, சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக   பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். 


 

 
அதில், 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
பலியான வீரர்களின் குடும்பத்திற்கு உதவ பலர் முன்வந்துள்ளனர்.  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் ஏற்கனவே, வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ.1.08 கோடி வழங்கியிருந்தார். 
 
இந்நிலையில், மற்றொரு பாலிவுட் நடிகரான விவேக் ஓபராயும், வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவ முன்வந்துள்ளார். ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி, சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சில வீரர்கள் மரணமடைந்தனர். எனவே, அவர்களையும் சேர்த்து மொத்தம் 25 வீரர்களின் குடும்பத்தினருக்கு பிளாட் (வீடு) வழங்க ஓபராய் முன் வந்துள்ளார். 
 
இதை அவரின் நிறுவனமான கர்ம் இன்ப்ராஸ்டக்சர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் வழங்குகிறது. இதுவரை 4 குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்பட்டு விட்டன.
 
விவேக் ஓபராய், நடிகர் அஜித் நடித்து விரைவில் வெளியாகவுள்ள விவேகம் படத்தில் வில்லனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.