திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (20:27 IST)

விஸ்வாசம்': சென்னை திரையரங்கில் பெண்களுக்கான சிறப்பு காட்சி

தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகியுள்ள 'விஸ்வாசம்' திரைப்படம் தல பொங்கலாக வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான முதல் நாள் டிக்கெட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகி முடிந்துவிட்டது

இந்த நிலையில் தல அஜித்துக்கு பெண் ரசிகைகளும் அதிகம் என்பதால் பெண்களுக்கு என சிறப்பு காட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒருசில திரையரங்குகளுக்கு விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட திருவான்மியூரில் உள்ள ஒரு திரையரங்க நிர்வாகிகள் ஜனவரி 10ஆம் தேதி காலை 10.30 மணிக்காட்சி பெண்களுக்கான சிறப்புக்காட்சி என அறிவித்துள்ளனர்

இதனையடுத்து ஐடி துறையில் பணிபுரியும் பெண்கள் பலர் இந்த காட்சிக்கு விறுவிறுப்பாக முன்பதிவு செய்து வருகின்றனர். முதல் நாளில் ஆண் ரசிகர்களின் தொல்லை இல்லாமல் முழுக்க முழுக்க பெண் ரசிகைகள் 'விஸ்வாசம்' படத்தை ரசித்து பார்க்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது