1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 24 ஏப்ரல் 2018 (13:55 IST)

தீபாவளிக்கு விஸ்வாசம் நோ ரிலீஸ்: படக்குழு அறிவிப்பு!

அஜித் சிறுத்தை சிவா கூட்டணியில் விவேகத்தை தொடர்ந்து அடுத்த படைப்பாக வெளியாக இருந்த படம் விஸ்வாசம். இந்த படத்தில் நயன்தாரா ஹிரோயினாக கமிட்டானார். 
 
இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அஜித் ரசிகர்கள் இந்த ஆண்டு தல படத்துடன் தீபாவலியை கொண்டாடலாம் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். 
 
ஆனால், விஸ்வாசம் தீபாவளிக்கு ரிலீசாக வாய்ப்பில்லை என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்பதுதான். 
 
விஸ்வாசம், தளபதி 62, என்ஜிகே உள்ளிட்ட படங்கள் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த போட்டிடில் இருந்து விஸ்வாசம் விலகுவதாக தெரிகிறது. 
 
மே மாதம் படப்பிடிப்பு துவங்கும் பட்சத்திலும் குறித்த தேதிக்குள் படப்பிடிப்பை முடித்து படத்தை பண்டிகை நாளில் ரிலீஸ் செய்வது சந்தேகம் என்று படக்குழுவுக்கு நெருங்கிய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.