புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: திங்கள், 16 ஆகஸ்ட் 2021 (16:07 IST)

ஷேர்ஷா படத்தில் இருந்து மறைக்கப்படும் விஷ்ணுவர்தனின் பெயர்!

இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள ஷேர்ஷா திரைப்படம் கார்கில் போரில் மரணம் அடைந்த வீரர் ஒருவரின் கதை.

அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதையைப் படமாக எடுக்கிறார்.

மத்திய அரசு இவருக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான ‘பரம் வீர் சக்ரா’வை வழங்கி கெளரவித்தது. விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நடிக்க நான் ஆர்வமாக இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார் சித்தார்த் மல்ஹோத்ரா. தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இந்த படம் அமேசான் ப்ரைமில் ரிலீஸாகி நல்ல கவனிப்பைப் பெற்றுள்ளது. ஆனால் படத்தின் ப்ரமோஷன்களிலும் வட இந்திய ஊடகங்களிலும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகிய இருவர்களின் பெயர் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டு வருகிறது.