நிலடுக்கம் வந்தால் கூட ரெண்டு நாளில் மறந்துடுவாங்க.. ஆனா என் நடுக்கம்… விஷால் ஜாலி பதில்!
விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாட்ரிப்பில் உருவாகி 12 ஆண்டுகளாக ரிலிஸாகாமல் இருந்த மத கஜ ராஜா கடந்த ஜனவரி 12 ஆம் தேதி ரிலீசானது. விஷால் மற்றும் சுந்தர் சி கூட்டணி முதல் முறையாக சேர்ந்த திரைப்படத்தில் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சந்தானம், மணிவண்ணன் மற்றும் மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த படம் ரசிகர்களை எதிர்பார்ப்பிற்கு மாறாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. பொங்கல் போன்ற ஒரு பண்டிகைக்கு ஏற்ற கலகலப்பான படமாக மத கஜ ராஜா உள்ளதாக விமர்சனங்கள் பரவ பொங்கலுக்கு ரிலீஸான அனைத்துப் படங்களிலும் அதிக வசூல் செய்த படமாக மத கஜ ராஜா முன்னணியில் உள்ளது.
இந்நிலையியில் இந்த படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஷால் “நிலநடுக்கம் வந்தால் கூட எல்லோரும் இரண்டு நாளில் மறந்துவிடுவார்கள். ஆனால் விஷால் நடுக்கத்தை யாரும் மறக்கவில்லை போல. எங்கெங்கோ வெளிநாட்டில் இருந்தெல்லாம் நரம்பியல் மருத்துவர்கள் எல்லாம் இதுபற்றி பேசி அறிவுரை சொல்லி வருகிறார்கள். ” என ஜாலியாகப் பேசியுள்ளார். முன்னதாக இந்த படத்தின் ரிலீஸுக்கு முந்தைய நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பேசும்போது அவருக்கு வார்த்தைகள் கோர்வையாக வராமல் கை நடுக்கத்தோடு பேசியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.